பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ஆழ்வார்களின் ஆரா அமுது


நோன்பு இயற்றப் பெறுவதனால், பாவையின் பெயர் நோன்பிற்கு ஆகி அது நோன்பைப் பற்றிக் கூறும் நூலிற்கு ஆகி வந்தது. இப்படி வருவதை இலக்கண ஆசிரியர் இரு மடியாகுபெயர் என்று கூறுவர். ஆயினும் ஆன்ம அணி உாகச் சேஷத்துவச் ? செல்வத்தையும் எம்பெருமான் முன் பதுமை போன்று கிடக்கும் பாரதந்திரியப் பெட்பையும் குறிக்கின்றமையின் இந்நூல் திருப்பாவை' என்று பெயர் பெற்றதாகவும் கொள்ளலாம். இது மிகச் சிறப்பு. நூலில் புகுவதற்கு முன் உரை மன்னன் பெரிய வாச்சான் பிள்ளை தமது திருப்பாவையின் மூவாயிரப்படி: வியாக்கியானத்தின் அவதாரிகையில் ஆண்டாளின் பக்திப் பெருக்கைக் கூறியிருப்பதைக் காட்டி மேலே செல்வேன். அவர் கூறுவார்: தேகாத்மாபிமாநிகட்கும், ஆத்ம ஸ்வரூபம் கைவந்திருக்கும் ரிஷிகளுக்கும் பர்வத பரமாணு வோட்டை வாசி போரும்; ரிஷிகளுக்கும் ஆழ்வார் களுக்கும் அத்தனை வாசி போரும்; ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும்: பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்.49 . இதனை விளக்குவேன். தேகத்தையே ஆன்மாவாகப் பாவிப்பவர்கட்கும் ஆன்ம சொரூபம் கைவரப் பெற்ற இருடிகட்கும் இறையன் பில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒப்ப நோக்கினால் முன்னவர் பக்தி அணுவளவாகவும் பின்னவர் பக்தி மலையளவாகவும் காணப்பெறும், 17. சேஷத்துவம்: பிறருக்கு (எம்பெருமானுக்கு) அடிமையாக இருத்தல். 18. பாரதந்திரியம்: பகவானுக்கு வசப்பட்டிருத்தல். 19. மயிலை மாதவதாசன்: திருப்பாவை வியாக்கி யானங்கள். பக்: காண்க,