பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

ஆழ்வார்களின் ஆரா அமுது


4. திருமாலைப் பற்றியவை: இவையும் பாசுரங்களில் என பாற்கடலுள் பையத்து இன்றமை வாது 24, ன் வள்ளத்தரவில் துயில தன்னிலங்கையை {2}, உலகினந்த் மர்ந்த நிலை (6, இராமனாய் வந்து அழித்தமை {24) - ஆகிய வற்றைக் காணலாம். காச்சியார் திருமொழி: இந்து அருளிச் செய்த இரண்டு பிரபந்தங்களுள் பிந்தியது. இதனை முதலாயிரத்தில் நான்காவதாக அடைவுபடுத்தினார் நாதமுனிகள். இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த உரை ஒன்று உண்டு; இது மணிப்பிரவாள நடையில் உள்ளது. இதைத் தழுவி பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் எழுதியுள்ள எளிய தெளிய நடையிலமைந்த உரையும் ஆண்டு, இத்திருமொழியில் 143 பாசுரங்கள் (14 பதிகங்கள்) உள்ளன. இப்பிரபந்தத்தில் திருமாலைத் தவிர வேறெ வரையும் கலவாதிருத்தல், இறைவனின் ஆண்மையிலும் தம் பெண்மையிலும் இடையறாது மனத்தைச் செலுத் துதல், தன் ஆன்மாவின் பெண்மை நிலைக்குத் தகச் செயல் புரிதல் ஆகிய பண்புகள் திகழ்வதைக் காணலாம். ஆண்பாலாரான மற்றை ஆழ்வார்கள் தம்மை நாயகிய ராக ஏறிட்டுக் கொண்டும் திருமாலை நாயகனாகக் கொண்டும் பாடிப் போந்தனராயினும் அவர்கள் மேற் கொண்ட பாவனை இயற்கையானதன்று என்றும், அதனால் அன்னோர் திருமாலிடம் செலுத்திய அன்பு மேட்டு மடைநீர் போன்றதென்றும் பெரியோர் பணிப்பர். ஆனால் ஆண்டாள் பெண்பாலராய்ப் பிறந்து ஒன்றையும் ஏறிட்டுக் கொள்ளாமல் அழகிய மணவாளனையே தம் நாயகனாக வரித்துக் கொண்டு அவனிடம் உள்ளுருகிச் செலுத்தும் இவருடைய இயற்கையான காதற் பெருக்கு பள்ளமடை நீர் போன்றதென்றும் அன்னார் கூறுவர். இஃது உபேய நூல் ஆயினும், திருப்பாவையில் உபேயமும்,