பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் 235 திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை தில்லைநகர் திருச்சித்ர கூடம் தன்னுள் அரசுஅமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன்மற்று அரசு தானே (10:7) என்பதால், இராமபிரானின் திருவடிகளைத் தலைமேல் கொள்ளுதலாகின்ற அரசாட்சியைப் பெற விரும்புகின் றாரேயன்றி, அதற்கு மாறாக ஸ்வாதந்திரியம் பாராட்டு கின்ற அரசாட்சியை ஒரு பொருளாக மதிக்கவில்லை" என்பது தெளிவாகின்றது. இங்ங்ணம் இவர் பெருமாஇர், டைய இராமபிரானுடைய) இன்ப துன்பங்களைத் தமது சுக துக்கங்களாகக் கருதியதனால் இவருக்குப் பெருமாள் என்றும் ஒரு பெயர் வழங்குவது பொருத்தந்தானே. இராமபிரான் நிறுவிய அரங்க நகர் அப்பன் பெரிய பெருமாள் என வழங்கப் பெறுகின்றான். இவரை தம் பெருமாள் என்று சிறப்பிப்பதும் உண்டு. இராமன் தம்பி இலக்குவன் இளைய பெருமாள்' என வழங்கப் பெறும் வைணவ மரபு உண்டு. பிறப்பும் வளர்ப்பும் : கேரள மாநிலத்தில் கோழிக் 2. நம் பெருமாள் என்ற சொல்லை திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ள நம் பெருமாளைக் காட்டும்" என்று பொருள் படுத்தாமல் நம்முடைய பெருமாள் எனக் காரணக் குறியாகப் பொருள் செய்வர் மணவாள மாமுனிகள். இவர் இங்ங்ணம் பொருள் படுத்தியதற்குக் காரணம், வெவ்வேறு தேயங்களிலும் இல்லங்களிலும் எழுந்தருளியிருக்கும் அர்ச்சையில் ஈடுபட் டிருப்பவரும், எல்லாக் கல்யாண குணங்களையும் அவரவர் விரும்பிய அந்தந்த அர்ச்சையில் காணலாம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே ஆகும். (முமுட்சு, 141 இன் உரை காண்க).