பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்று சொல்லுகின்றார். மழிசையாரும் குறுமுறுவவோடு இகழ்ச்சி தோன்ற, இவ்வூசியின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருள்வீர்” என்று விநோதமாகக் கூறுகின்றார். கண்ணுதலப்பனுக்கு இந்த ஏளனச் சொற்கள் செவிப் பட்டதும் கடுஞ்சினம் கொள்ளுகின்றார். இவ்வளவு செருக் குடைய நின்னை இப்பொழுதே மன்மதனைச் செய்தது போல் அழித்து விடுகின்றேன் பார் என்று தமது நெற்றிக் க்ண்னைத் திறக்கின்றார். அதினின்றும் புகையும் பொறி யுமாகக் கிளர்ந்தெழுந்த தீப்பிழம்பைக் கண்டு ஆழ்வார் சிறிதும் கலங்கவில்லை. இந்திரன் போல் உடல் முழுவதும் கண்ணாயிரம் கொண்டாலும் அஞ்சேன்" என்று சொல்விய வண்ணம் தமது வலத் திருவடியிலுள்ள ஒரு கண்ணைத் திறந்து விடுகின்றார். அதினின்றும் ஒரு பெருந்தி கிளர்ந் தெழுந்து ஊழித்தீயினும் பன்மடங்கு அதிகரித்து. அவ்வனலை அடர்க்கத் தொடங்குகின்றது. இந்நிலையில் அரன் அக்கடு நெருப்பை அணைக்கும்படி தமது சடை யிலுள்ள பல மேகங்களை ஏவுகின்றார். அவை யுக முடிவில் தோன்றும் சோனை மழை பொழிந்து பெருவெள்ளம் கோக்கின்றது. மழிசைபிரான் சிறிதும் சலியாமல் பகவத் பக்தியிலே ஊன்றி இருக்கின்றார். இது கண்டு முக்கண் மூர்த்தி மிக வியந்து இவருக்குப் பக்திசாரர் என்று திருநாமம் சாத்தி இவரது பெருமையைக் கொண்டாடித் தம் இருப்பிடம் சென்று சேர்கின்றார். இக்கதை ஆழ்வாருக்குப் பெருமை சேர்க்கும் பொருட்டுக் கட்டிவிட்ட கதையென்றே தோன்றுகின்றது. இப்படிக் கட்டியவர் சைவர்களின் உணர்வுக்குப் பங்கம் விளைகின்றதென்று சிறிதும் கருதினாரிலர் சைவப் பெருமக்களும் திருமாவின் பெருமை யைக் குறைத்தற் பொருட்டு பல கதைகளைக் கட்டி விட்டுள்ளனர் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சுக்கிரஹார சித்தன் வணங்குதல்: ஒரு சமயம் ஆழ்வார் யோகத்தில் எழுந்தருளியிருக்கின்றார். சுக்கிரஹார சித்தன்