பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவினக்கு இதி? விழவேண்டாம் என்பது குறிப்பு. பிறிதொரு பாசுரத்தில் இக்கருத்தையே, திருமா மணிவண்ணன் செங்கண்மால் எங்கள் பெருமான் அடிசேரப் பெற்று-வாழும் வகையறிந்தேன்' |மாமணி.நீலமணி, அடி-திருவடி) என்று தெளிவுபடுத்துகின்றார். நாம் இவ்வுலகில் படும் துன்பங்களையும் தொல்லை களையும் போக்கக் கூடிய இறைவனுடைய அழகும் தேசும் இயல்பாகவே ஆசைப்படும் படியாக உள்ளன. கரை யற்றதாகத் தோன்றும் நீலக்கடலும், எல்லையற்ற நீலவானமும், கருமாமுகிலும், நீல இரத்தினங்களும் நீல மலர்களும் சுட்டிக் காட்டக்கூடிய அழகு முழுமையன்றோ அவனது திருமேனியின் வடிவம்: மரகத மணியைக் கண்ணுறும்போதும், அந்தி வானத்தின் வர்ண ஜாலங் களைப் பார்க்கும்போதும் இலக்குமி நாராயணமூர்த்தியின் வசீகர அழகு நினைவுக்கு வருகின்றது ஆழ்வாருக்கு. பூவையும் காயாவும் லேமும் பூக்கின்ற காவி மலர்என்றும் காண்தோறும்-பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று." என்ற நம்மாழ்வார் பாசுரத்தையும் நம்மை நினைக்கச் செய்கின்றது. இத்துடன்: எழில்கொண்டு மின்னுக் கொடிஎடுத்து வேகத் தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்-எழில்கொண்ட 96. முன் திருவந 59. 97. பெரி. திருவந். 73.