பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

ஆழ்வார்களின் ஆரா அமுது


விடுகின்றது. தம்மை ஈடேறச் செய்வதற்காக இறைவன் அன்று இவர் இருந்த இடத்திற்கே வந்துவிட்டதுபோல் தோன்றுகின்றது. இவருக்குள்ளேதான் அவன் இருக்கின் றானா? அவனுக்குள்ளேதான் இவர் இருக்கின்றாரா?” என்று தெரியாதபடி தன்னுடைய மங்கள சோதியை இவருடைய ஆன்மாவோடு கலந்து விடுகின்றான். *ஆதலால் நான் என்றும் மாறாத இன்பமாகிய விடுதலை பெற்றுவிட்டேன்!” என்கின்றார். இதனை, இயக்கறாத பல்பிறப்பில் என்னைமாற்றி இன்றுவந்து உயக்கொள்மேக விண்ணன்கண்ணி என்னிலாய தன்னுளே மயக்கினான்தன் மன்னுசோதி; ஆதலால், என் ஆவிதான் இயக்கெலாம் மறுத்தறாத இன்பவீடு பெற்றதே." இயக்கு - தொடர்ச்சி; மற்றி . மாற்றுகைக்குத் திரு வுள்ளம் பற்றி; உயக்கொள் . உய்விக்கும்; நண் ணி - நெருங்கி; தன்னிலாய என்னுள் . தன்னுடன் ஒன்றி நிற்கும் என்னுள்; மயக்கினான் . கலந்தான்; இயக்கு . பிணைப்பு] என்ற பாசுரத்தில் கண்டு மகிழலாம். திருமழிசையாழ்வார் திருமாலையே முழு முதற் கடவுளாக வழிபடுவர்; மறந்தும் புறந்தொழாது வாழ்ந் தவர். என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத் தேவைத்து கின்றும் இருந்தும் நெடுமாலை - என்றும் 70. திருச். விருத். 120