பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திசாரர் 酸3 என்றும் கிளர்ஒளிஎன் கேசவனே! கேடுஇன்றி ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள்" என்றும் கூறுவதைக் கண்டு மகிழலாம். பேயாழ்வார் சீடராயிருந்தும், இந்த ஆழ்வாரிடம் முதலாழ்வார்களின் சமரச உணர்ச்சி காணப் பெறவில்லை. குருவின் வைராக்கியம் சீடர் உள்ளத்தில் வீர வைணவ மாகப் பரிணமித்தது. இவர் காலத்தில் சமய வாதங்கள் பெருகத் தொடங்கின என்றும், சைவ.வைணவ வேறுபாடு அதிகப் பட்டதென்றும் ஊகிக்க முடிகின்றது. எனினும் இவருடைய வாழ்க்கையாலும் உபதேச மொழிகளாலும் வைணவத்திற்கு ஆழமும் வேகமும் அதிகரித்தன என்பதை யும் காண முடிகின்றது. தமிழ்ப் பொதுமக்கள் இவரையும் முதலாழ்வார்களோடும் கா ைர க் கால் அம்மையார், திருமூலர் முதலான சிவனடியார்களோடும் சேர்த்துத் தமிழ்ப் பெருமுனிவர்களாகவே போற்றிப் பெருமைப் படுத்தினார்கள் என்ற வரலாற்று உண்மையையும் இப்போது நாம் சிந்திக்கின்றோம். முதலாழ்வார்களும் திருமழிசையாழ்வாரும் தோன்றிய பகுதி தொண்டை நாடு என்று அக்காலத்தில் வழங்கியது. காளத்தியும் இதில் அடங்குவதால், இப்போது நாம் இருக்கும் நகிரி என்ற ஊரும் தொண்டை நாட்டைச் சேர்ந்ததே. தொண்டை நாடு சான்றோர்கள் உடைய நாடு. இங்கிருந்துதான் வைணவ இயக்கம் தெற்கிலுள்ள சோழ நாட்டிலும் மலைநாடாகிய சேர நாட்டிலும் கடைக் கோடியிலுள்ள பாண்டி நாட்டிலும் பரவியது. இதுகாறும் கரை கட்டிய காவிரிபோல், உள்ளடங்கிப் பக்திப் பெரு. வெள்ளம், சேர, சோழ, பாண்டிய நாடுகளில் கரை புரண்டோடும் மிகப் பெரிய வெள்ளமாகிறது என்ற உண்மையும் நமது வரலாற்றுக்கண் பின் நோக்கிப் பார்த்து நமது வரலாற்று உணர்வை மகிழ வைக்கின்றது. 83. டிெ. 59 13