பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டரடிப் பொடிகள் 199 பிறப்பும் வளர்ப்பும் : இந்த ஆழ்வார் சோழ நாட்டில் திருமங்கையாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற திருப்புள்ளம் பூதங்குடி என்னும் திவ்விய தேசத்தின் அருகில், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில்: திருமண்டங்குடியில் அவதரித்தவர். பிறந்தநாள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம். இவரைத் திருமாலின் வைஜயந்தி என்னும் வனமாலையின் அம்சமாகக் கொள்வர் வைணவப் பெருமக்கள். தந்தையார் வேத விசாரதர் என்ற முன் குடுமிப் பிராமணர்; தாயார் பெயர் அறியக் கூடவில்லை. தந்தையார் இவருக்கு இட்ட பெயர் விப்ரநாராயணர். உரிய காலங்களில் உபநயநம் முதலிய வைதிக சம்ஸ்காரங்களைச் செய்வித்துத் தாமே வேத சாத்திரங்களைப் பயிற்றுவிக்கின்றார். விப்ர நாராயணரும் நான்கு வேதம் ஆறு சாத்திரங்கள் இவற்றை முறையாகக் கசடறக் கற்று வல்லவராகின்றார். பெற்ற கல்விக் கேற்பவும் வளரும் சூழ்நிலைக் கேற்பவும் சத்துவ குணமே தலையெடுத்து ஞான பக்தி வைராக்கியங்களுடன் தந்தையார் தாய்ார்க்கு மகிழ்வடைய வாழ்ந்து வருகின் றார். இங்ங்ணம் இருக்கையில் சேனை முதலியார் வைகுந்தத்தினின்றும் எழுந்தருளி இவருக்கு உரிய சமாச்ர யணம் முதலிய சடங்குகளை நிறைவேற்றி வைக்கின்றார். கோயில் வாசம் : திருமந்திரப் பொருளை நன்கு அறிந்த விப்ர நாராயணர் கருணைக் கடலான கமலைக் 2. மயிலாடுதுறை - திருச்சி இருப்பூர்தி வழியிலுள்ன. சுவாமிமலை என்ற நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. நிலையத்திலிருந்து மாட்டுவண்டி, குதிரைவண்டி இவற்றைக் கொண்டுதான் .ெ ச ல் : வேண்டும். என் துணைவியுடனும் செல்வர்கள் இருவரு டனும் 1968 ஜூன் திங்களில் கும்பகோணத்தில் தங்கி ஒன்பது தலங்களைச் சேவித்தபோது இந்தத் திவ்வியத் தேசமும் ஒன்றாக அமைந்தது. திருமண்டங்குடி சேவிக்க இறையருள் இல்லை.