பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்ற பாசுரப் பகுதியால் தெளியலாம். பலன் சபுருஷார்த்தம்' என்று வழங்கப் பெறும். இறைவனை அடையும் வழி இதம் (ஹிதம்) என்று வழங்கப் பெறும். வீடு பேற்றிற்குச் சாதனமாக அனுட் டிக்கப் பெறும் வழி என்பது இதன் பொருள். இந்த வழி இரு வகையாக அநுட்டிக்கப்பெறும். ஒன்று, பக்தி யோகம்; மற்றொன்று, பிரபத்தியோகம். இவற்றை விரித்துக் கூற நேரம் இல்லை. பக்தியோகம் : இது பல நிலைகளில் அநுட்டிக்கப் பெறுதல் வேண்டும். பலம் பெற நெடுங்காலம் ஆகும். திருமழிசையாழ்வார் பக்திசாரர்' என்ற தம் பெயருக் கேற்ப, பக்தியே வடிவெடுத்த பரமயோகியாகக் காணப் படுகின்றார். செவிக்குஇன்பம் ஆவதுவும் செங்கண்மால் காமம்; புவிக்கும் புவியதுவே கண்டிர்.”*

புவி - பூமியிலுள்ளார்; புவியும் அதுவே . (நிழல் பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத்திருநாமமே.) என்றும்,

தொழில்எனக்குத் தொல்லைமால் தன்காமம் ஏத்த: பொழுது,எனக்கு மற்றதுவே போதும்' /தொல்லைமால் . புராணனான எம்பெருமான்) என்றும், 74. நான், திருவந். 69 75. டிெ,85