பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

ஆழ்வார்களின் ஆரா அமுது


என்ற குறள்மணியின் ஒளி இப்பாசுரத்தில் வீசுவதைக் கண்டு மகிழ்கின்றோம். ஆழ்வார் கூறும் அடுத்த எடுத்துக்காட்டு அற்புத மானது. நோயாளி ஒருவன் மருத்துவனிடம் வருகின்றான். வாளால் அறுத்தும் சூடுபோட்டும் அவனது நோயைப் போக்குகின்றான் மருத்துவன். நோய் நீங்கும் பொருட்டு நோயாளி அச்சிகிச்சைத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுகின்றான். இத்துன்பங்களை விளைவித்த மருத்து வனிடமும் நீங்காத அன்புடையவனாகவே இருக்கின்றான். இங்ங்னமே, துன்பங்களைக் கொடுத்தும் இறைவன் ஆன்மாக்களை உய்விப்பான் என்பது வைணவ சமயக் கொள்கை. இறைவனது கருணை வெள்ளம் துன்ப வடிவிலும் நம்மை வந்தடையும் என்பது ஆழ்வாரின் குறிப்பு. இறைவனே அனைத்தையும் அருளிக்காப்பவன் என்ற துணிவு ஏற்பட்ட பின்னர் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்ல்ை என்பது ஆழ்வார் திருவுள்ளம். வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட் டம்மா! நீ ஆள் ஆ! உனது அருளே பார்ப்பன் அடியேனே (4). (மாளா.நீங்காத; காதல்-அன்பு: ஆள் ஆ(க).அடிமை உண்டாக; பார்ப்பன்-நோக்கியிரா நின்றேன்; என்ற ஆழ்வார் பாசுரத்தை மனம்விட்டுப் பாடவேண்டும். ஆழ்வார் அப்படித்தானே பாடியிருக்க வேண்டும்? இதனால் பரமான்மா சீவான்மாவுக்கு நன்ம்ை செய்வதிலே ஊன்றியிருப்பதும், சீவான்மா பரமான்மாவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டியிருப்பதும் தெளிவாகின்றன.