பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

ஆழ்வார்களின் ஆரா அமுது


தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரச ஐசுவரியம் அனைத்தையும் புசிக்கைக்கு எனக்கு ஒரு பிள்ளை வேணும்" என்று தோன்பு நோற்றுப் பெருமாளைப் பெற்றாற் போலே, நந்தகோபனும், காணாயன் கடிமனையில் தயிர்உண்டு நெய்பருக நந்தன் பெற்ற ஆனாயன்' என்ற திருமங்கை மன்னன் வாக்கின்படி, திருவாய்ப்பாடி, பால்பண்ணையில் கிடைக்கும் பொருள்கள் அடங்கலும் யாழ் போக வொண்ணாதென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றுப் பெற்ற பிள்ளையல்லவா கண்ணன்? ஞாலம் ஏழும் உண்டான்' என்று சொல்வதை விட வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்: தான் என்று கூறுவதில் இந்த ஆழ்வாருக்கு முற்றிலும் மன திறைவு. "உப்புச் சாறாய் எட்டா நிலத்தில் இருக்கும் தேவர் களின் அமுதம் போலன்றிப் பரம மதுரமாய்ப் பரம சுலபமா யிருக்கும் நான் கண்ட அமுதம்" என்பார் என் அமுதினை' என்கின்றார். சிலர் அமுதனை' என்று ஒதுவது சுவை யற்றது. ஆழ்வாருக்குப் பெரியபெருமாள் அமுதத்தை யொத்திருத்தல் கருத்தேயல்லது அமுதனாகவே இருத்தல்" கருத்தன்று. திருமங்கையாழ்வாரும், அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை' என்று போற்றுவது கண்டு மகிழத்தக்கது. அமுதபானம் பண்ணினவர்கள் பாலையும் சோற்றை யும் பிறவற்றையும் கண்ணெடுத்துப் பார்ப்பார்களோ? இவரும் மற்றொன்றினை என்கின்றார் - வேறொன்றின் 26. பெரி. திரு. 5.5:3. 27. திருநெடுந், 14