பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

ஆழ்வார்களின் ஆரா அமுது


இதில் அடியவர்கள் திருந்துவதற்காக - இலாப நட்டங் களில் உகப்பும் வெறுப்பும் கொள்ளாதிருப்பதற்காக - எம் பெருமான் உகந்து கோயில் கொண்டிருக்கும் திருப்பதிகள் பல்லாயிரம்; அவற்றுள் ஒருவரையறை இல்லை. அவற்றுள் கோயில், திருக்கோட்டியூர், திருவேங்கடம், திருநீர் மலை என்னும் நான்கு திவ்விய தேசங்களை மட்டிலும் இப் பாசுரத்தில் குறிப்பிட்டு அவ்விடங்களில் எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றான் என்கின்றார். மூன்றாவதாக, பேயாழ்வார் பாசுரம் ஒன்றையும் காட்டுவேன். விண்ணகரம் வெ.கா விரிதிரைநீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை - மண்ணகந்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு." (மண் நகரம் - பூமியிலுண்டான வைகுந்த மாநகர் போன்ற, வேளுக்கை . கச்சியிலுள்ள ஆளழகிய சிங்கர் சந்நிதி, மண் அளந்த . பூமியில் உண்டானர் இதில் பேயாழ்வார் ஒப்பிலியப்பன் சந்நிதி என்கின்ற திருவிண்ணநகர், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதி என்கின்ற திருவெஃகா, திருமலை, கச்சியிலுள்ள வேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் பெரிய கோயில் - ஆகிய திருப்பதிகள் இறைபாடி’யாகவுள்ளன என்று குறிப்பிடுகின்றார். தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு' என்று ஈற்றடியில் அருளிச் செய்ததன் கருத்து - மாவலி பக்கல் யாசகனாகப் போகும்போது எவ்வளவு செளலப்பி யமும் செள சீல்யமும் தோன்றிற்றோ அவ்வளவு சீலம் இத் திருப்பதிகளிலும் தோன்றும்படியாக இருக்கின்றான் என்பதைக் காட்டுவதற்காக. 14. மூன். திருவந். 62