பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

ஆழ்வார்களின் ஆரா அமுது


கிடந்துஇருந்து கின்றியங்கு போதும்நின்ன பொற்கழல் தொடர்ந்துவீள் விலாததோர் தொடர்ச்சிநல்க வேண்டுமே. பொற்கழல்-அழகிய திருவடி, வீள்வு-நீக்கம்.) என்பதால் பின்னும் வற்புறுத்தப் பெறுகின்றது. பிரயத்தி யோகம் : இந்த ஆழ்வாரும் பிரபத்தியை அதுட்டித்தவர். இதுவே ஆழ்வார்கள் அனைவரும் மேற். கொண்ட பொதுவழி; பெருவழி. நம்மாழ்வார் திருவேங்கட முடையானைச் சரண் புகுந்ததாக அமைந்த திருவாய்: மொழியை (6.10:10) நாம் அறிவோம். இதையொட்டியே, இவரும், அடைக்கலம் புகுந்தஎன்னை அஞ்சல் என்ன வேண்டுமே. " அடைக்கலம்-சரணாகதி: அஞ்சல்.பயப்படாதே." என்ற பாசுரப் பகுதியாலும் அறியலாம். மேலும் இதனை , புனித நின் இலங்குபாதம் அன்றிமற்றோர் பற்றிலேன் எம்ஈசனே: (புனித-பரிசுத்தனே, இலங்குபாதம்-ஒளிமிக்க திருவடி கள்; பற்று.பி.டி.1 என்ற பாசுரப் பகுதியிலும் வற்புறுத்துவர். சரணாகதி தத்துவத்தை நான்முகன் திருவந்தாதி யிலும் காணலாம். ஏன்றேன் அடிமை; இழிந்தேன் பிறப்பு:இடும்பை' 79. திருச். விருத். 104 86. டிெ. 92 81. டிெ. 90 82. நான். திருவந். 95