பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாணர்குல விளக்கு 65 காண்பனவும் உரைப்பனவும் மற்றொன் றின்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதல் பாண்பெருமாள் அருள்செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம்.' என்று போற்றுவதையும் கண்டு மகிழலாம். இனி, பிரபந்தத்திற்கு வருவோம். இப்பிரபந்தம் அரங்கன் திருவடி முதல் திருமுடிவரை ஆழ்வார் கண்ட காட்சியைச் சித்திரிப்பதாக அமைந்தது. இதனை முன் னரும் குறிப்பிட்டோம். இதில் முதல் மூன்று பாடல்கள் அமலனாதிபிரான் (1) உவந்த உள்ளத்தனாய்’ (2), * மந்திபாய் வடவேங்கட மாமலை (3) என்று தொடங்கு கின்றன. இவற்றில் முதல் எழுத்துகள் அ, உ, ம என்பன வாகும். இவை ஓம்’ என்னும் பிரணவத்தின் வடிவமாக அமைந்திருப்பதைக் காண்கின்றோம். முதற்பாசுரத்தில் பெரிய பெருமாளின் திருவடியழகு ஆழ்வார்மீது அலை பாய்ந்து அவரைப் பரவசமாக்கிய நிலை கூறப்பெறுகின்றது. கமலபாதம் வந்துனன் கண்ணின் உள்ளன. ஒக்கின்றதே (1) என்கின்றார். இவ்விடத்தில் முமுட்கப்படியின் இரண்டு வாக்கியங்கள் அநுசந்திக்கத்தக்கனவாகும். பிராட்டியும் அவனும் விடினும் திருவடிகள் விடாது திண்கழ லாயிருக்கும். ' என்பது ஒன்று. பிராட்டியார் சேதநனுடைய துன்பு, நிலையைக் கண்டு மனம் இரங்கி அவனை அங்கீகரிக்குமாறு: ஈசுவரனுக்குப் புருஷகாரம் (பரிந்துரைத்தல்) செய்வர் 14. டிெ 132 15. முமுட்சுப்படி - 146 (துவையம்)