பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

சாயங்கால மேகங்கள்

அன்று மாவரைக்கிற காரணத்தால் சித்ராவைக் கேஷில் உட்காரச் சொல்லியிருந்தான்.

அதிகாலை வியாபாரம் ஆரம்பமாகியிருந்தது. பெரும் பாலும் காலை வேளைகளில் டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் - கார்பொரேஷன் மேஸ்திரிகள் இந்த மாதிரி ஆட்கள்தான் அதிகம் சாப்பிட வருவார்கள். மற்றவர்கள் வர ஏழு மணிக்கு மேலே ஆகும். நேரம் ஆக ஆகப் பார்ஸல் கட்டிக் கொடுக்கிற வேலை அதிகமாகும். பார்ஸல் பில்களுக்கு வேறு சரி பார்த்துப் பணம் வாங்கிப் போட வேண்டியிருக்கும். வெளியே ‘பிஸி’ ஆவதற்குள் தானே மாவரைத்து முடித்து விட்டுக் கேஷுக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன் வேலையில் முனைந்திருந்தான் பூமி.

அவனுக்கு அந்த வேலை அதிகச் சிரமமாயில்லை. ஒரு புது விதமான உடற்பயிற்சி போலவே அமைந்திருந்தது. சிறிது நேரத்திற்குள்ளேயே பழகியும் விட்டது. அவன் மாவை அரைத்து முடித்து வழித்துப் போட இருந்த போது சித்ராவின் குரல் வெளியே யாருடனோ உரத்து வாதிடுவது கேட்டது. விநாடிக்கு விநாடி வாக்குவாதம் வலுப்பது குரல்கள். மூலம் உட்புறம் பூமிக்குக் காதில் விழுந்தது. அப்படியே மாவு வழித்த கையுடன் பூமி முன் பக்கம் விரைந்தான்.

கார்ப்பொரேஷனைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அனுமானிக்கத்தக்க ஓர் ஏழெட்டுப் பேர் கேஷ் டேபிள் முன்னால் நின்று கொண்டிருந்தனர். சித்ரா அவர்களிடம் ஏதோ இரைந்து கொண்டிருந்தாள்.

“ஒண்ணு ரெண்டுன்னா பரவாயில்லே சார்! சுளையா இருபது ரூபாய்க்கு மேலே பில் ஆகிறது! எப்படி சார் விட முடியும்?”

“கார்ப்பொரேஷன் ஆளுகளைப் பகைச்சுகிட்டீங்கன்னா இருபது ரூபாய்க்கு பதில் இருநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவோம்! நாளைக்கே சானிடரி இன்ஸ்பெக்டரும் ஹெல்த் ஆபிஸரும் வருவாங்க, ஹோட்டல்லே சுகாதாரம், சானிடரி