பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

47


பாராயணம் செய்கிறானே; அவன் எப்படி இவ்வாறு வேறாயினான்? சென்ற பிறவியில் அவன் செய்த கருமம்; செய்யாத தருமம்; இப்பிறவியில் அவனைத் தாக்கி இருக்கின்றன.

பேசும் முன் சிலர் பொடி போட்டால்தான் உற்சாகமாகப் பேசுவார்கள்; நெடியாகத்தான் இருக்கும்; என்றாலும் இது சிலருக்குப் பழக்கம் ஆகிவிட்டது. நீ சோறு தட்டில் இட்டு உண்பதற்கு முன் வெளியே எட்டிப் பார்; காத்திருப்பான் ஒரு பரம ஏழை; அவனுக்கு இம்மி அளவு; அது கம்மிதான். ஒரு பிடி அரிசி தானம் இடு; சிரமமாகத்தான் இருக்கும். என்றாலும் இதை மறக்காதே.”

வறியவன் வந்து நிற்கிறான்; அவனைப் பார்த்துக் கேட்கிறான். “முகவரி கெட்டா இங்கே வந்து நிற்கிறாய்? வள்ளல் பாரி என்றா என் வீட்டு முன்னால் எழுதி ஒட்டி இருக்கிறேன்? ‘காரி’ என்பவன் யார் தெரியுமா? அவனும் ஒரு உபகாரி, அவர்கள் கொடுத்துக் கெட்டவர்கள்; வள்ளல் என்று பெயர் எடுத்தவர்கள் எல்லாம் வறுமைப் பள்ளத்தில் உழல்கிறார்கள். நமக்கு ஏன் வள்ளல் பட்டப் பெயர்? கொடுப்பதும் இல்லை கெடுவதும் இல்லை” என்று கம்பீரமாகப் பேசுகிறான்; இவன் நடுநிலைமைவாதி.

ஒழுங்காகத்தான் வாழ்கிறான்; மாதம் முப்பது; இருபதில் கெடுபிடி; வீட்டில் அடிதடி, இல்லை அரிசி ஒருபடி என் செய்வது? கேட்டு வாழத்தான் வேண்டும். இரவல்; இரத்தல் என்பதுதான் இரவல் ஆயிற்று. எப்படியாவது நிரவல் செய்ய இதுதான் வழி; சே! மானம்