பக்கம்:புத்த ஞாயிறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அா:பார்த்தசாரதி 75

கணவாளன் : யோசிப்பதற்கு எதுவுமே இல்லை உலகத்து மனிதர்களிடையே உலகத்தோடு கலந்து வாழ நாங்கள் விரும்பவில்லை.மனிதர்களிடமிருந்து விலகி வேறுபட்டு வாழ்ந்தாலும் நாங்கள் நினைப்பாலும்பாவனைகளாலும் பழக்கத்தாலும் தேவர்களாக வாழ்கிருேம். இப்படியே எங்களை வாழவிடுங்கள். எங்களிடமிருக்கும் அபூர்வ மான கலை நுணுக்கங்களும் எங்களோடு சேர்ந்தே அழிந்து போகட்டும்.

மோகனவல்லி : (சீற்றத்தோடு) அப்படியா? உங்கள் பிடிவாதம் மாருத பட்சத்தில் அப்படித்தான்... அந்த அபூர்வமான கலைநுணுக்கங்கள் இந்தக் காட்டோடு அழிந்து போக வேண்டியதுதான்... -

கோதை : இல்லை! நிச்சயமாக இல்லை. அவருடைய தெய் வீகக் கலை நுணுக்கங்கள் ஒருநாளும் அழியப் போவ

மணவாளன் : (திரும்பி) யார்! கோதையா? -

Iநீராடிய கோலத்தில் வந்து நின்ற கோதையைப் பார்த்ததும் பாளையத்து இளவரசியின் பார்வை பற்றி யெரிந்தது. அவளுடைய பொருமை கடுஞ்சொற்களாக வெளிப்போந்தது.1 - - - - -

மோகனவல்லி : (கோதையைப் பார்த்து) இந்த மகா

கவிஞருடைய வாழ்க்கை இப்படி ஒடுங்கிப் போகும்படி இவருக்குச் சத்துருவாக வாய்த்த சபலம் நீதாண்டி பெண்ணே! அவ்வாறிருக்கும்போது நீயே எப்படி இவருடைய கலை நுணுக்கங்கள் அழியாமல் உலகத்தில் பரவுவதற்குத் துணை செய்ய முடியும்?

கோதை : எப்படியோ முடிகிறதா இல்லையா என்பதை நீயும் பார்க்கத்தானே போகிருய்? ஒரு செயலைத் தீர் மானமாகச் செய்ய முடிவு கொண்டவர்கள் அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/77&oldid=597442" இலிருந்து மீள்விக்கப்பட்டது