பக்கம்:புத்த ஞாயிறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 33

இசைப்பாட்டு (4)

(கும்மி-மொட்டு-முப்பது கோடி முகமுடையாள் என்ற பாரதியார் பாடல் போல்) இந்திரவிழா வந்தது - இந்திரவிழா வந்தது சந்திர சூரியர் தேடிவந்து காண்கிற சுந்தரச் சோழர் தலைநகரிலே இந்திரவிழா வந்தது-இந்திரவிழா வந்தது.

சரணங்கள் பொன்னும் மணியும் முத்தும் பவழமும் மன்னும் சோழர் தலைநகரம்-கலநகரம் அன்றும் இன்றும் என்றும் பெருநகரம் ஆடவர் பெண்டிர் அழகிய திருநகரம் யவனர் சோனகர் சீனர் கலிங்கர் காகர், மிசிரர், மிலேச்சர், மேதினி காற்றிசை மீதிலும் உள்ளவர் அனைவரும் கவனம் கொள்ளும் கவவளம் நிறைநகரம் ஆடல் பாடல் முதலாம் கலேகளெல்லாம் அதிரூப சுந்தரிகள் ஜதிதாளமிட-மாலை சூடும் அரங்கங்கள் பலகொண்ட சாம்ராஜயம் சூதுவாதுகள் கற்றறியா நன்மக்கள் சாம்ராஜ்யம்

காலையும் மாலேயும் நண்பகலும் மகிழ்ந்திட இந்திரவிழா வந்தது-இந்திரவிழா வந்தது சந்திர சூரியர் தேடி வந்து காண்கிற சுந்தரச் சோழர் தம் தலைநகரில் இந்திரவிழா வந்தது வந்தது-வந்ததுவே. இளம். பி : ஆகா! இந்திரவிழா வந்திருப்பதில் இந்த நாடோடிப் பாடகனுக்குக் கூட எத்தனை பெருமிதம்? முற்றும் துறந்த முனிவகிைய நானே ஒவ்வோர் இந்திர விழா வரும்பேர்தும் அதையடுத்துத் தொடர்ந்து வரும் வைகாசி விசாகத்தையும்-விசாகத்தின்போது நான் மணிபல்லவ யாத்திரை சென்று கோமுகிப் பொய்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/35&oldid=597398" இலிருந்து மீள்விக்கப்பட்டது