பக்கம்:அணியும் மணியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

வற்புறுத்துகின்றனர். அந்த அவலத்தை ஆற்றுதல் ஒல்லாது என்று அவள் வெளிப்படுத்தும் கருத்தில் அன்பு நெஞ்சத்தின் ஆழத்தைக் காணமுடிகிறது.

“எனக்கு இருப்பது ஒரே மகள். அவளும் நேற்று வீரமிக்க தலைவனோடும் பெருமலையில் அரிய வழி கடந்துசென்று விட்டாள். இனி நீங்கள், ‘அவலத்தைத் தாங்கு’ என எளிதில் கூறிவிடுகின்றீர்கள். அஃது எவ்வாறு ஒல்லும்? அறிவால் ஆராய்ந்து எளிது என்று கூறுவதை யெல்லாம் உணர்வால் எளிதில் ஏற்றுக் கெள்ள இயல்வதில்லை. என் குறுமகள் விளையாடிக் கொண்டிருந்த நொச்சி மரத்தையும் அதனருகில் உள்ள வீட்டுத் திண்ணையையும் கண்டால், அவள் இல்லாத காரணத்தால் வெறுமையான காட்சி ஈந்து அவலத்தைத் தருகிறது; என் உள்ளம் வேகிறது. அவளின்றித் தனித்திருக்கும் அந்த இடங்களைக் கண்டு அத் தனிமைக் காட்சியைத் தாங்க என் உள்ளத்திற்கு ஆற்றலில்லை. அவள் பயின்ற இடமெல்லாம் இப்பொழுது வெறுமையுற் றிருக்கின்றது” என்று கூறுகிறாள்.

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்
இனியே, தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன்
அணியியல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியுந் தெற்றியும் கண்டே

- நற்றிணை, 184

“கண்ணிலுள்ள மணிப்பாவை வெளியே வந்து நடைகற்பது போல அழகாக நடந்து விளையாடிய அச் சிறுமகள் இப்பொழுது அகன்றுவிட்டதால் கண்களில் ஒளியிழந்து