பக்கம்:அணியும் மணியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

கொள்கையைச் சீவகன் வாயிலாக ஆசிரியர் உணர்த்தக் காண்கிறோம். சமணத் துறவிகட்கு அறிவு உணர்த்த ஒரு சூழ்நிலையைக் கதையில் ஏற்படுத்திக் கொண்டதைப் போலவே உலகினருக்கு அறிவுறுத்தவும் ஒரு தக்க சூழ்நிலையை அமைத்துக்கொள்ளக் காண்கிறோம். கதையில் இத்தகைய தொடர்பு வேண்டப்படுவது இல்லை யெனினும், வேண்டுமென்றே சீவகன் ஒரு வழிப்போக்கனைச் சந்திக்குமாறு செய்து, அவனுக்கு வாழ்க்கையைப்பற்றி விளக்கம் தருவதுபோலத் தம் கொள்கைகளைப் புகுத்தக் காண்கிறோம். வழிப்போக்கனைத் தம் கருத்துகளைக் கேட்கத் தகுந்தவனாக அமைத்ததன் நோக்கம், வாழ்க்கையாகிய வழியிலே செல்வார்க்கு இக் கருத்துகள் ஏற்கும் என்ற கருத்தாலேயே என்று கொள்ளலாம். சீவகன் வழிப்போக்கனுடன் பேசும்பொழுது உள்ளம் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் சுவைமிக்க பேச்சுரைகளை அமைக்கக் காண்கிறோம்.

வழிப்போக்கன் ஒருவன், சீவகனைப் பார்த்து, “நீர் எவ்வூரீர்? எவ்வூருக்கு வந்தீர்? நும் மனைவியர் எத்துணையர்? அவர்களுள் மக்கள் எத்துணையர்? அவர்களுள் ஒழுக்கமிக்கார் எனைவர்?” என்று கேட்கிறான். அதற்கு விடையளிக்கும் சீவகன், “யான் இவ்வூரேன்; இப்பதிக்கே வந்தேன்; என் மனைவியர் நால்வருக்கும் சேர்ந்து நற்கதியளிக்கும் ஒரே மகன் உளன்” என்று விடையளிக்கிறான்.

“நால்வருக்கும் ஒரு மகன் எவ்வாறு பிறக்கக் கூடும்?” என்று வழிப்போக்கன் கேட்கிறான். அதற்குச் சீவகன் அளிக்கும் விடை எதிர்பாராதவாறு வேறு விதமாக அமைகிறது. அதில் சமய விளக்கத்தைப் புகுத்திக் கவிஞர் பெரிய ஆசிரியராக மாறுதைக் காண்கிறோம். தானம், சீலம், தவம், இறைவழிபாடு ஆகிய நான்கும் முன் சொன்ன மனைவியர் எனவும், இவற்றின்