பக்கம்:அணியும் மணியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

‘தணிக்க முந்துங்கள்’
‘காட்ட முந்துங்கள்’

வினையெச்சங்களை அடுக்கிக் கூறுதல் அவர் தனிச் சிறப்பாகும்.

‘மக்கள் இரத்தத்தில் ஊறி ஊறி ஒன்றியது’

கூட்டு அமைப்புகள் அவர் தனிச் சிறப்பாகும். ‘கருதினர் எழுதினர், புரிந்தது’ என்பதற்கு மாறாக.

‘கருதலாயினர், எழுதலாயினர், புரியலாயிற்று’ என்று தொழிற்பெயரோடு ஆக்கச் சொல் பிணைந்த கூட்டுவினை அமைப்பாக அமைத்தல் காண்கிறோம். சிறப்பாகத் தொழிற் பெயர்களை ஆளுதல் அவரிடம் மிகுதி எனலாம்.

‘சென்றனர்’ என்பதற்கு மாறாகப் ‘போந்தனர்’ என்ற சொல் வழக்கை ஆளுவதையும் பார்க்கின்றோம்.

எதிர்மறை வாக்கியங்களால் உடன்பாட்டுப் பொருளை அறிவிப்பது அவர் சொல்லாட்சித் திறனாகும்.

“துறவு பேசாமல் போகவில்லை என்று குறிப்பிடுகின்ற திருவள்ளுவர், துறவு பேசவில்லையோ என ஐயுதல் கூடும். அவர் துறவு, பேசாமல் போகவில்லை” என்று எதிர்மறையில் முடிக்கின்றார்.

கவிதை நடை

உரைநடையில் உணர்வு கலந்து அது கவிதை நடை ஆகிறது. அவர் கவிதைகள் பக்தி மனப்போக்கிலும், தத்துவ விசாரணைகளிலும் அவர் இறுதிக் காலத்தில் அமைந்து விட்டன. அவை பிறருக்கு என்று எடுத்துக் கூறப்பட்ட செய்திகள் அல்ல; தனக்கும் தன் மனத்துக்கும் எழுப்பிக் கொள்ளும்