பக்கம்:அணியும் மணியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


11. திரு. வி. க. வின் நடையும்
சொல்லாட்சியும்


தமிழ் நடைக்குப் புத்துயிர் ஊட்டியவர் திரு. வி. க. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றவர்கள் நீண்ட வாக்கியங்களையும், செயற்கையான சொற்றொடர்களையும் செந்தமிழ் நடை என ஒருபக்கம் இழுத்துச் சென்றனர். கொச்சை நடையைப் பேச்சு நடை என மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தமிழ் நடையைக் கொச்சைப் படுத்தினர். ஒரு சிலர் வட சொற்களைப் பெய்து தமிழை ஒரு கலப்பு நடையாக்கினர். தமிழ் நடை இதுதான் என்று தெளிவு படாமல் இருந்தது.

இந்த மாறுபட்ட நடைகளுக்குள்ளே உயிர்த்துடிப்புள்ள நடையை அமைத்துத் தந்தவர் திரு. வி.க. மேடைப் பேச்சை முதன் முதலில் இலக்கிய நடையில் பேசியவரே திரு. வி.க. எனலாம்.

திரு. வி. க. பெரியபுராணம், சிலப்பதிகாரம், தேவாரம், ஆழ்வார் பாடல்கள், கம்பன் கவி அமுதம் இவற்றில் தோய்ந்தவர். அதனால் அவர் சொல்வளம் நெகிழ்வு உடையதாகக் காலத்தோடு ஒட்டி இயங்குகின்றது. பனிக்கட்டிகள் உடைந்து அருவியாக இயங்கும் அருமையை இதில் காணலாம். திருக்குறள் சுருங்கச் சொல்லித் தெளிவுப்படுத்தும் நூல்; அதை ஒட்டிச் சிறு தொடர் கொண்டு