பக்கம்:புத்த ஞாயிறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 7t

இளைஞனே ! உன்னை உடனே வழிக்குக் கொண்டுவரு

கிறேன் பார்... -

(உரத்த குரலில்) ஏய் யாரங்கே? (சேவகர் வருகின்றனர்)

அரண்மனைக் காரியஸ்தரை உடனே அழைத்துவா... போ... அப்படியே வன போஜனத் துக்குப் போனவர்கள் திரும்பிவிட்டார்களா என்றும் பார்த்து வா... (அவர்கள் போகிரு.ர்கள்)

மோகனவல்லி: (தனக்குள்) இதைப்பாடு என்று என் இதயமே தானகப் பொங்கி மேலெழுந்தாலொழிய நான் எதையும் எதிர்பார்த்து யாரையும் பாடுவதில்லை' என்று நெஞ்சை நிமிர்த்தித் தன்மானம் பேசி ை யல்லவா, இளைஞனே... உன்னையே தன் முன் பாட வைக்கப் போகிருள் இந்த மோகனவல்லி... பார்... (காரியஸ்தரும் இன்னும் சிலரும் வருகிரு.ர்கள்)

காரியஸ்தர்: என்ன இளவரசியாரே! அழைத்தீர்களாமே!

மோகனவல்லி: ஆமாம்! மேற்கு மலைப்பக்கம் மூங்கில் காட்டுக்குத்தானே அரண்மனையைச் சேர்ந்தவர்கள் வனபோஜனத்துக்குப் போனர்கள்? நாமும் போக லாம்...சில வேட்டைக்காரர்களை வழிகாட்ட அழைத் துக்கொண்டு நமது பயணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

காரியஸ்தர்: ஆகட்டும் இளவரசி... இன்னும் இரண்டு. நாழிகைப் போதில் புறப்பட்டுவிடலாம்... ஆட்களை அழைத்து உடன் ஏற்பாடு செய்கிறேன்.

(போகிருர்)

காட்சி-8 |மலைத்தொடர்கள் தொடங்கும் பகுதியில் ஒரு மூங்கிற் காட்டையொட்டி நடுவாக அமைந்திருந்த செங்குத்துப் பாறையில், சுனே அருகே பர்னசாலை போல் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/73&oldid=597438" இலிருந்து மீள்விக்கப்பட்டது