பக்கம்:அசோகர் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அசோகர் கதைகள்
கதை இரண்டு


ஐயம் தீர்க்கும் ஆசான்

து ஒரு சிறு கிராமம். சுற்றிலும் வயல்கள் குழ்ந்து ஆங்காங்கே சிறுமரத் தோட்டங்கள் நிறைந்து அந்தக் கிராமம் அழகான தோற்றத்துடன் விளங்கியது. அழகான கிராமம் என்பதைத் தவிர அதற்கு வேறு ஒரு சிறப்பும் இருந்தது.

பாடலி புத்திரத்திலிருந்து புத்தகயா போவதற்கும், காசியிலிருந்து ராஜகிரி போவதற்கும் இடையே அந்தக் கிராமம் இருந்தது. வழிப் போக்கர்கள் சநிதித்துக் கொள்ளும் மைய ஊராக அது விளங்கியது.

அதனால் உழவுத் தொழிலைத் தவிர அந்தக் கிராம மக்கள் மற்றொரு தொழிலும் செய்து பிழைத்துக் கொள்ள வழியிருந்தது. வழிப்போக்கர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்வது தான் அந்தத் தொழில்.

விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க வேண்டும் என்கிற பண்பாடெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/22&oldid=734143" இலிருந்து மீள்விக்கப்பட்டது