பக்கம்:அசோகர் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

23

சுவர்களில் யாரோ ஒரு சாதாரணச் சித்திரக்காரன் புத்தர் பெருமானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை வண்ணப் படங்களாக எழுதியிருந்தான். அவை தவிர, உத்திரங்களின் மீதும், சத்திரத்து முகப்பிலும், புத்தர் பெருமானின் திருவாசகங்களும் அசோகருடைய நல்லுரைகளும் எழுதப் பெற்றிருந்தன.

சத்திரம் கட்டி முடித்து வெகு நாளாகிவிடவில்லை. புத்தம் புதிதாக இருந்த அந்த சத்திரத்திற்கு வந்த வழிப் போக்கர்களுக்கு அது தேவலோகம் போல் காட்சியளித்தது. பாடலிபுத்திரத்திலிருந்து புத்த கயாவிற்கும் கயாவிலிருந்து தலைநகருக்கும் போகும் வழிப் போக்கர்கள் பெரும்பாலும் புத்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் பிட்சுக்களாகவும் இருந்தார்கள். காசிக்கும் ராஜகிரிக்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள், வணிகர்களாகவும், பிராமணர்களாகவும், வேறு பல பெருந்தொழில் துறையினராகவும் இருந்தார்கள்.

யாராயிருந்தாலும் வரவேற்று இடங்கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. யாருக்கும் எவ்வித வேற்றுமையும் காட்டப்படவில்லை. எல்லோரையும் சமமாக நோக்கும் தன்மையே சத்திரத்து அதிகாரிகளிடம் காணப்பட்டது. எல்லாம் அசோக மாமன்னரின் நோக்கப்படியே யிருந்தது.

இந்தச் சத்திரத்துக்கு ஒருநாள் ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் உடல் அங்கங்களிலே இளமையின் பூரிப்பும் கண்களிலே புதிய மினுமினுப்பும், முகத்திலே கவலையற்ற குதுரகலிப்பும் அவன் கடையிலே ஒரு துடி துடிப்பும் காணப்பட்டன.

காசியிலிருந்து வந்த ஒரு கூட்டத்தினரோடு அவனும் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடன் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/25&oldid=734146" இலிருந்து மீள்விக்கப்பட்டது