பக்கம்:அசோகர் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அசோகர் கதைகள்

குடியானவர் அவனுக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவனும் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தான்.

"ஐயா, காங்கள் இப்போதுதான் இன்பமாக, குடும்பமாக வாழ்கிறோம். என் அண்ணன்மார் இருவரும் என் மேல் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். என் தாயும் எங்கள் மூவரையும் தான் பெற்ற செல்வங்கள் என்று கருதுகிறாள். ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டு வாழ்கிறோம். பெரிய அண்ணன் கூட இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இரண்டாவது அண்ணன் இப்போது எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டான். சமையற்கலை பற்றி ‘பாக சாஸ்திரம்' என்ற பெய ரில் அவன் எழுதிய புத்தகத்துக்கு ராஜகிரி மன்னர் பரிசு கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார்" என்று மகிழ்ச்சியோடு கூறினான் மகாலிங்க சாஸ்திரி.

"இந்தக் குடும்பப் பிணைப்பு ஏற்படக் காரணம் என்ன வென்று நினைக்கிறாய்?" என்று கேட்டார் குடியானவர்.

"அசோகருடைய பொன்மொழியும், அதைப் பின் பற்றிப் பார்க்க வேண்டுமென்ற தங்கள் தூண்டுதலும் தான் காரணம்" என்று இளைஞன் பதிலளித்தான்.

"இன்னும் ஒரே ஒரு சோதனை. இது சிறிது கடுமையான சோதனைதான். இதையும் செய்து பார்த்துவிடு" என்றார் குடியானவர். இளைஞன் கவனமாக அவர் கூறியதைக் கேட்டான்.

"தம்பி, இப்போது நீங்கள் மூன்று பேரும் உங்கள் பெரிய அண்ணன் வீட்டுக்குச் செல்லுங்கள். பணம் எதுவும் வேண்டாம் என்றும், உங்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து வயிற்றுக்குச் சோறு போட்டால் போதும் என்றும் கேளுங்கள். அவன் வீட்டுக்கு உங்கள் தாயை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/38&oldid=734160" இலிருந்து மீள்விக்கப்பட்டது