பக்கம்:தமிழ்த் திருநாள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. வாழ்க வாழ்கவே !
எடுப்பு

வாழ்க வாழ்கவே-செழித்து
வையம் முழுதும் வளம்பல கொழித்து
(வாழ்க)

உடன் எடுப்பு

வாழ்கநம் தமிழர் வாழ்க திராவிடர்
வாழ்கநம் இந்தியர் வாழ்க உலகினர்

அடிகள்


தேனினும் இனிய தீந்தமிழ் வாழ்க
மானினும் இனிய மங்கையர் வாழ்க
(வாழ்க)
கள்ளினைப்போக்கிக் கடுங்கொலை நீக்கிக்
காந்தியார் கொள்கையைக் கருத்தினில் தேக்கி
(வாழ்க)
நிறப்போர் நிகழ்த்தும் நீள்செருக் கின்றி
மறப்போர் விலக்கி மகிழ்ச்சியில் துன்றி
(வாழ்க)
உணவும் உடையும் உறையுளும் மன்னிப்
பணமும் படிப்பும் பற்பலவும் துன்னி
(வாழ்க)
துன்பம் என்பதே தோன்றா இறைவனின்
இன்பகல் வீடாக இவ்வுலகினை யாக்கி
(வாழ்க)


11