பக்கம்:Saiva Nanneri.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சைவ நன்னெறி

1. சைவத்தின்‌ சிறப்பு

”சைவத்தின்‌ மேற்சமயம்‌ வேறில்லை.”

—எல்லப்ப நாவலர்‌,

“ஓது சமயங்கள்‌ பொருளுணரு நூல்கள்‌
ஒன்றோடொன்று ஒவ்வாமல்‌ உளபலவும்‌ இவற்றுள்‌
யாது சமயம்‌ பொருள் நூல்‌ யா திங்கென்னில்‌
இது ஆகும்‌ அது அல்லது எனும்‌ பிணக்கின்றி
நீதியினால்‌ இவையெல்லாம்‌. ஓரிடத்‌தே காண
நின்றது யாதொரு சமயம்‌ அது சமயம்‌ பொருள்‌ நூல்‌
ஆதலினால்‌ இவையெல்லாம்‌ அருமறை ஆகமத்தே
அடங்கியிடும்‌ அவையிரண்டும்‌ அரனடிக்கீழ்‌அடங்கும்‌.“

—அருணந்தி சிவாச்சாரியார்‌; சிவஞான சித்தியார்‌,

“The Saiva Siddhanta Philosophy of South India is onc of the classical products of the Tamil Mind.”

“Saiva Siddhanta is predominantly a Tamil Philosophy."

—John H. Piet; A Logical Presentaton
of the Saiva Siddhanta Philosophy.

தென்னிந்தியாவிற்குரிய சைவ சித்தாந்தம் தமிழர் அறிவுத் திறனால் விளைந்ததாகும்; சைவ சித்தாந்தம் தமிழர் தத்துவமேயாகும்.

—சான் எச். பியட்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/10&oldid=1404675" இலிருந்து மீள்விக்கப்பட்டது