இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
306
- ஜீவா : செத்துக்கிடக்கிற கட்டு விரியனை
- எட்டியிருந்தே நொறுக்குவே !
- தோழிகள் : புத்தியிருக்குது கூஜா தூக்க !
- பித்துயிருக்குது ராஜாவாக
- வரவுமட்டும் பொண்ணோடெ
- செலவு எல்லாம் ஒன்னோடெ!
- மோகனா : மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான்
- மண்ணாங்கட்டி மாப்பிளே !
- ஜீவா : சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு
- நல்லாத் தூங்குவே தோப்பிலே !
- கூப்பிடும் போது கொறட்டை விடுவே! பொண்ணு
- கூப்பிடும் போது கொறட்டை விடுவே !
- ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே !
- பெற்ற மகனை விற்ற அன்னை-1958
- இசை : விஸ்வநாதன், ராமமூர்த்தி