பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

285


Both :வலை வீசம்மா வலை வீசு!

வாற மீனுக்கு வலை வீசு!

பெண் :வளையல் ஓசை கேட்டா-சிலது

வந்திடும் முன்னாலே!


ஆண் :நிலையை மறந்து நிண்ணே-சிலது

மயங்கிடும் தன்னாலே!
அலையைப் போல நெளியும்-சிலது
ஆளைக் கண்டு ஒளியும்!


பெண் :ஆட்டங் காட்டி அலையும்!-சிலது

நோட்டம் பாக்க வளையும்!


பெண் :கண்ணுக்குத்தப்பி தூண்டிக்குத்தப்பி

திரியும் மீன்கள் பலவுண்டு!


ஆண் :கரையின் பக்கமா தலையைக் காட்டும்

கருக்கல் இருட்டைத் துணை கொண்டு!
காலம் நேரம் சமயம்-பாத்து
காலைக் கவ்விப் பிடிக்கும்!


பெண் : தேளைப் போல கடிக்கும்-சிலது

ஆளின் உயிரைக் குடிக்கும்!