பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270



உள்ளம்: ஏ மனிதா! எங்கே ஓடுகிறாய்?........நீ
         எங்கே ஓடுகிறாய்?
         வறுமை இருளால் வழி தடுமாறி
         மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே
                                       ஓடுகிறாய்?

உருவம் : வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்!
           வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்!

குழந்தை: (எங்கே அப்பா)

உள்ளம் : ஊழ்வினைப் பயனை வென்ற தாரடா?
            உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா?

குழந்தை: (பிள்ளை யாரப்பா)

உருவம் :மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம்
          மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள்

குழந்தை: (பூஜை செய்யணும் அப்பா)

உருவம் :நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது?
          நலம் பெற உலகில் மரணமே தோது?

உள்ளம் : வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்?

உருவம் : வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்?

உள்ளம் : பொறுமை வேண்டும்!

உருவம் : பொறுத்தது போதும்!