பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 அண்டகோள மெய்ப்பொருள்

எனவும், 'மதியுண் அரமகள்' எனவும் வருவனவற்றால் தேவர்க்குத் திங்களுணவாதல் காணலாம். இச் செல்வம் குப்பையாதலும் கட்பு ஆதலும் இவ்வுரைக்கும் ஒக்கும். 11–12. ஒன்று வித்து அறு கோட்டு-பிறிதொன்று வித்து அற்ற குற்றமுடைத்தென்றவாறு. இது கைவல்யார்த்தியின் பலனாதல் காட்டுவாராய் வித்தற்ற தோஷமுடைத்தென்று கூறினார். கோள்-குற்றம். தாளையுடையது தாட்டு என வருவதுபோல இதனையுங் கொள்க. வித்து என்பது பெரிய மரத்தையுந் தன்னுட் சூக்குமமாய் அமர்த்திக்கொண்டு, வாய்த்தவிடத்து அம் மரமாய்ப் பரிணமிப்பதற்குக் காரணமாய்த் தொன்று. இதனை "நீல நிறத்து நெடுந்தகை வந்தோர், ஆலமர் வித்தி னருங்குறளானான்” எனக் கம்பநாடர் கூறுதலானறியலாம். ஈண்டுத் தன்னிலையறியாத் தொன்மிகுபெருமரம் இக்கனியி னுள்ளே சூக்குமமாகவும் இல்லாமையால், எப்பொருட்கும் வித்தாய தனிமுதல் இல்லாமல், கேவலந் தன்னைத்தானே அனுபவிப்பதாகலின், தெய்வமில்லாமையைக் குற்றமாகக் கொண்டு கூறினார். தானோருருவே தனிவித்தாய்' (1, 5, 4) என்னுந் திருவாய்மொழியிலே இறைவனை வித்தாகக் கூறப் படுதல் காணலாம். "பிறப்பிறப்பு மூப்புப்பிணி துறந்து பின்னும் இறக்கவு மின்புடைத்தா மேலும்-மறப்பெல்லாம் ஏதமே யென்றல்லா லெண்ணுவனே மண்ணளந்தான் பாதமே யேத்தாப் பகல்" (பெரிதிருவந். 80) என்பதனாற் கைவல்ய சுகத்தின் சிறப்பெல்லாம் விசத மாக எடுத்தோதி, அதன்கண் பரதெய்வத்தை யேத்தாத மறப்பே பூர்ணமென்றும் அஃது ஏதமே என்றும் தேற்ற மாக உரைத்தருளியதுகொண்டு இங்கும் குற்றமுடைத்