பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்டக்கோள மெய்ப்பொருள் 29. தென்று தெளிவித்தார். எதம், குற்றம், கோள் என்பன ஒரு பொருளன. ஏதம்-துன்பம் எனினுமமையும். 'நிற்கின்ற தெல்லா நெடுமாலென் றோராதார் கற்கின்ற தெல்லாங் கடை' (இரண்டாந்திரு. 54) ஆதலான், இவர்க்குக் கைவல்யசுகம் கடையாயிற்று. இந்திரச் செல்வம் பெற்றவன் தன் புண்ணியம் நசித்துப் பின் மண்ணிற் பிறத்தலான் ஒருகால் தெய்வத்தை நினேந்து வீடெய்த அவகாசமுண்டு. இக்கைவல்யசுகத்திற் பட்டானுக்கு மீண்டும் பிறத்தலின்மையால், தெய்வ நினைப்பிற்கே. அவகாசமில்லையென்று கொண்டு கடையாக்கினர். அமரர் கழல்தொழுது நாளும் இடைநின்ற வின்பத்த ராவார்' (இரண்டாந் திருவந்தாதி, க.க) என்பதனால் தேவர்க்குக் கடவுள் கழறொழுதலுண்மையும் அவர் இடைநின்ற இன்பக் தராதலும் உணர்ந்துகொள்க. இதற்கு வேறு கூறலு முண்டு. இனிக் கைவல்யத்தைக் தோடற்ற நெல்வித்திற்கு (க. உ.உ) விஷ்ணுபுராணத்தில் உவமிக்கலான், அதனேயே ஈண்டுத் தழிஇயினாரெனக் கொண்டு வித்தறு தோட்டு' எனப்பாடம் ஓதி, 'ஒன்று அறுதோட்டு வித்து' என்றலும் நன்கு பொருத்தும். நாற்கூற்றே மருந்து" (திருக்குறள். ௯௫௦) என்புழிப்போலத் தோட்டது என்பது தோட்டு என விகாரமாயிற்றெனினும் இழுக்காது. 12. ஆமா விளைக்கும் நாடன் என்பது, இங்ஙனம் ஆமாறு நாடு விளைப்பவன் எ-று. ஆம் ஆறு என்பது ஆமா என வந்தது செய்யுள் விகாரம். 'தேறுமா செய்யா அசுரர்களை' (பெரிய திருவந்தாதி, ௩௩) என இவ்வாழ்வாரே வழங்குதல் கண்டு கொள்க. ஆமாறொன்றறியேன்" (திரு வாய் 4,9,2) என்பது இவர் வழக்கேயாம். இங்ஙனம் ஆகும் ப்ரகாரத்திலே (ஆம் ஆற்றிலே) விளைக்கும் நாடன் என்க.