பக்கம்:அறிவியல் வினா விடை-புவியியல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. 52. 55. 54. 35. 56. 37. 15 இவை முறைக் குறிக்காேடுகளாலும் குறியீடுகள் மூலமும் காட்டப்படுகின்றன. ஒரு நாட்டின் எல்லைகளும் நதிகளும் எவ்வாறு காட்டப்படுகின்றன? பலவகைக் கோடுகள் மூலம் காட்டப்படுகின்றன. நகரங்களும் பொது இடங்களும் எவ்வாறு காட்டப் படுகின்றன? புள்ளிகளாலும் குறிகளாலும் காட்டப்படுகின்றன. கதிரவன் ஏன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது? புவி மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசைக்குச் செல்வதே ஆகும். இதனால் கதிரவன் கிழக்கிலிருந்து மேற்கில் செல்வது போல் தெரிகிறது. படவீழ்த்தல்கள் என்றால் என்ன? ஒரு தளப்பரப்பில் புவியின் கோளப்பரப்பைக் குறிக்கும் முறை. மக்கேட்டார் படவீழ்த்தல் என்றால் என்ன? படத்தை வரையும் முறை. பிளிமிஷ் புவி இயலார் மக்கேட்டர் இதைப் புனைந்தவர். இதில் அட்சக் கோடுகள் சமமான ஒரு போக்கு நேர்க்கோடுகளாகக் குறிக்கப்படும். தீர்க்கக் கோடுகள் அவ்வாறே ஒரு போக்கு நேர்க் கோடுகளாகக் குறிக்கப்படும். ஆனால், அவற்றில் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் உள்ள தொலைவு நிலக் கோட்டிலிருந்து அமையும் தொலைவிற்கேற்ப மாறுபடும். பீட்டர் படவீழ்த்தல் என்றால் என்ன? இப்படத்தில் தட்டையான பரப்பில் அட்சக் கோடுகளும் தீர்க்கக் கோடுகளும் குறிக்கப்படும். இதில் உலகின் வட்டாரங்களும் நாடுகளும் அவற்றிற்குரிய அளவோடு காட்டப்படும். அவற்றின் வடிவங்கள் திரிந்திருக்கும். நிலப்படத்தில் பயன்படும் முதன்மை வண்ணங்கள் யாவை? அவை எவ்வவற்றைக் குறிப்பவை? 1. பச்சை - சமவெளி 2. நீலம் - கடல்கள்