பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Vi

கண்டாமே'-என மாணிக்கவாசகரும், 'அன்பாற் கெடுதவிலாக் கொண்டரிற் கூட்டியவா *** வேலோன்'- என அருணகிரியாரும் மிக அருமையாக எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆதலால், அடியார் புகழைப் பாடும் பேறு எளிதிற் கிடைக்கக் கூடிய பேறு அல்ல என்பது தெளிவாக விளங்குகின்றது. அது பற்றியே ஆண்டவன் புகழைப் பாடுவதற்கும் அடியார் புகழைப் பாடுவதற்கும் 41-ஆண்டு என்னும் நீண்ட இடைவெளி வேண்டியிருந்தது போலும்.

2. இன்ன நாயன்மார் இன்ன கொண்டு செய்தார் என்பது விரைவில் எளிதில் விளங்கவேண்டிப் பாடல்களின் சுருக்கமும் வசனமாக ழுதப்பட்டுள்ளது.

3. பண்ணுடன் பாடச் சில பாடல்கள் அமையும் என்பதைக் காட்ட இன்ன பாட்டு இன்ன தேவாரப் பண்ணில் அமையும் என்பகைக் காட்டும் அநுபந்தம் ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

4. ஆசை காரணமாக யாக்கப்பட்ட இந்நூலில்உள்ள பிழைகளை ஆன்ரறோர் பொறுத்தருளுவாராக.

சென்னை

292. லிங்க செட்டித்தெரு

வ.சு.செங்கல்வராய பிள்ளை.

10-10-1950