பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31


16. உருத்திர பசுபதி நாயனார்

நீரில் நின்றபடியே சிவ பிரானைத் தியானித்து ருத்ர ஜெபம் செய்த உருத்திர பசபதியாரைக் கருதிக் தொழுவாம்.

17. திருநாளைப் போவார் நாயனார்

திருப்புன்கூர்ச் சிவனுக்குக் தொண்டு பல செய்தவரும், தில்லையைத் தரிசிக்கும் ஒரு நாள் கிட்டுமோ என உருகி நின்றவரும்,' நீ எரி மூழ்கி வா' என்று இறைவன் ஓத அங்கனமே எரியில் மூழ்கிச் சிவ முநிவர் வேடம் பொலிய எழுந்தவருமான திருகாளைப் போவாரின் சிறத்தைப் பேசி வினைகளை ஒழிப்பாம்.

18. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

தம்மிடம் வந்த அடியவரின் அழுக்கேறு கந்தையை மாலைப் பொழுதுக்குள் துவைதுத் தருவன் எனச் சொல்லிக் குளத்து நீரில் துவைக்கும் போது அடர்மழை விடாது பெய்ய, 'ஐயோ! அடியவரது துணியை எப்படி உலர்த்துவேன், அபசாரப் பட்டேனே. இந்தப் பாறையில் என் தலையை உடைத்துக் கொள்வேன்'-எனக் கூறித் தலையை மோதும்போது இறைவரே தமது திருக்கரத்தால் தடுக்கப் பெற்ற திருவாளராம் திருக்குறிபுத் தொண்டரது அருட்பேற்றைச் சிந்தித்து மகிழ்வாம்.

19. சண்டேசுர நாயனார்

சிவ பூஜைக் கென்றிருந்த பாற்குடத்தை தமது தந்தை வந்து இடறத் தாதை யென்று பாராது அவரது தாளைத் தடிந்து, கநிர்மாலியம், தொண்டர்க்குத் தலை