பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

38. கூற்றுவ நாயனார்

மாற்றலர் பலரை வென்று முடிசூட வேண்டி
வளர் தில்லை அந்த ணரையே
ஆற்றவும் வேண்டி நின்றும் அவரே மறுக்க
அயர்வுற்ற அந்த அமயம்

    • ஏற்றவர் கனவில் நல்கு* பதமே முடித்த

இசையோடும் ஆட்சி அதுசெய்
கூற்றுவ நாயனாரின் அடியே பணிந்து
குணமே உரைத்து மகிழ்வாம்.

{[gap}}

39. புகழ்ச்சோழ நாயனார்

{{gap}]

மாமலர் சிக்கிய யானையை வாட்டிய
வாளார் சீரார் எறிபத்தர்
தோமிலர் என்றறி ஞானமி குந்தவர்
சூழ்போர் பட்டோர் தலைக்கண்ணே
பூமரு புன்சடை கண்டு ககுலைதெரி
புக்கே மிக்கோர் புகழ்ச் சோழர்
நாமமென் நாவினில் ஆசையொ டேசொலும்
நன்னுள் எந்நாள் என்பேன் நான்.

{[gap}}

40. நரசிங்க முனையரைய நாயனார்

புனைவர் இங்கிவர் காமக் குறிகளே என்றே
அயலினர் புறம் போகத்
தினையும் அருவருப் பில்லேன் இவரொரு
திருநீ றணிதரு தேகத்தர்


** ஏற்றவர்= விடையேறி சிவன் : *பதம்=திருவடி