பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
34. சிறப்புலி நாயனார்

வேரி வார்பொழில் ஆக்கூரி லேவரு வேதியர்
மாரி யென்ன அடியவர்க் கீந்தருள் வள்ளலார்
சீரொ டைக்கெழுத் தோதிபல் வேள்விகள்செய்தவர்
ஏரி யைந்த சிறப்புலி யார்கழல் ஏத்துவாம்.

35. சிறுத்தொண்ட நாயனார்

ஏர்கொள் மாவிரதி யாரவர் உண்ணச்
சீர்கொள் தன்னுடைய செல்வனை யீர்ந்தே
நார்கொள் நல்லுணவு நல்கிய விரச்
சூர ரான சிறுத்தொண்டரைச் சொல்வாம்.

36. சேரமான் பெருமாள் நாயனார்

தேருமா பூஜையின் முடிவிலே சிலம்பொலி
செவியிற் பெற்றோர்
ஒருமா ரூரராம் நம்பியின் தோழமை
உரிமை யுற்றோர்
ஏருலாங் கயிலையில் எழிலுலாப் பாடியே
இன்ப முற்றோர்
சேரமா நாயனார் அவர் பெரும் புகழது
செப்பற் பாற்றோ ?

37. கணநாத நாயனார்

ஆழி யானும் அறியா அண்ணல் அருந்தொண்டே
பாழி உலகிற் பரவ வேண்டிப் பாடுற்றே
காழி வேந்தர் கழலைப் போற்றுங் கணநாதர்
வாழி யென்ன நிதமும் போற்றி வாழ்த்துவாம்.


* பாழி = பெருமை,