பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ped

466

Per


பூசிய சுவர்களில் கூழாங் கற்களைப் பதித்து அலங்கார வேலைப்பாடு செய்தல்.

Pedestalt: நிலை மேடை: தூண் சிலை போன்றவற்றின் அடிப்பீடம்.

Pediment: (க.க.) முக்கோண முகப்பு முகடு: பண்டையக் கிரேக்கக் கட்டிடக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட வரி முக்கோண முகப்பு முகடு.

Pedometer: அடியீடுமானி: காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி.

Peen: (எந்.) சுத்தி மென்னுணி: உலோக வேலைத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் சுத்தியல் தலைப்பின் மெல்லிய நுணி.

Peg: ஆப்பு : அறைகலன்களின் உறுப்புகளை ஒன்று சேர்த்து இணைப்பதற்கு ஆணிகளுக்குப் பதிலாகப் பயன்படும் மரத்தினாலான முளை.

Pellucid தெள்ளத் தெளிவான : தெள்ளத் தெளிவான, ஒளி எளிதில் ஊடுருவிச் செல்லக்கூடிய,

Pendant switch : (மின்.) பதக்க விசை : முகட்டிலிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது.

Pendulum : ஊசல் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து தொங்குகிற

ஒரு பொருள். இது கடிகாரத்தின் ஊசல் போன்று இருபுறமும் தங்கு தடையின்றி ஊசலாடக் கூடியது.

Penetrating oil: ஊடுரு எண்ணெய் : துருப்பிடித்த அல்லது அரிக்கப்பட்ட உறுப்புகளை எளிதாக இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஒரு தனி வகை எண்ணெய்.

Penetrometer: (குழை.) ஊடுருவு மானி: திடப்பொருள்களின் மேற்பரப்பில் ஊருடுவும் திறனை அளவிடுவதற்கான ஒரு கருவி.

penny: (மர.வே.) பென்னி: ஆணி களின் நீளத்தைக் குறிக்கும் ஒரு சொல். பத்துப் பென்னி என்பது ஒர் ஆணியின் 3" நீளத்தைக் குறிக்கும். ஆதியில் "பென்னி என்பது நூற்றுக்கு விலையைக் குறித்தது

Penny-weight: பென்னி எடை: இருபத்து நான்கு குன்றிமணி எடை அளவு.

Pentagon: (கணி.) ஐங்கோணம்: ஐந்து பக்கங்கள் கொண்ட ஓர் உருவம்.

Penumbra: அரை நிழல்: பூமி-நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரை நிழல் வட் டம்.

Percentage: (கணி;எந்) விழுக்காடு: நூற்றில் பகுதி; சதவீதம்; நூற்று விழுக்காடு.