பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

அறிவுக்



3. மறம்

68. மனிதன் செய்யக்கூடிய தீய செயல்களில் எல்லாம் முற்றிலும் தீயதும், சற்றும் மன்னிக்க முடியாததும் களவு ஒன்றே.

ரஸ்கின்

69. தீயொழுக்கத்திற்குக் கட்டுப்பாடில்லை என்று நினைப்பது தவறு. தீயவனே எஜமானர்கள் அனைவரிலும் கொடிய எஜமானனுக்கு அடிமையாயிருக்கிறான். அக்கொடிய எஜமானன் யார்? அவனுடைய சொந்தத் தீய உணர்ச்சிகளே.

ஆவ்பரி

70. மருந்து பல சமயங்களில் பலிக்காமல் இருக்கக் கூடும். ஆனால், விஷமோ ஒருபோதும் பலிக்காமல் போகாது.

ரஸ்கின்

71. பாவம் செய்பவன் மனிதன் பாவத்துக்காக வருந்துபவன் ஞானி; பாவத்துக்காகப் பெருமை கொள்பவன் சாத்தான்.

புல்லர்

72. சாத்தானுடைய பந்துக்களில் ஒருவரை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் போதும், அவன் குடும்பம் முழுவதுமே குடிபுகுந்துவிடும்.

ஆவ்பரி

73. ஒருவன் தன் ஒளியில் தான் நிற்கும்பொழுது உண்டாக்கும் நிழலே அவன் வாழ்வில் அதிக இருள் உடையதாகும்.

ஆவ்பரி