பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

27


109. தரையோடு தரையாய் நசுக்கப்பட்டாலும், சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும். ஆண்டவனுடைய அந்தமில்லா ஆண்டுகள் அதற்கும் உண்டு.

பிரையண்ட்

110. ஏன் உண்மையாய் நடக்க வேண்டும்?- இந்தக் கேள்வி மூலமே இகழ் தேடிவிட்டாய்- 'மனிதனாயிருப்பதால்' என்பதே அதற்கு மறுமொழி.

ரஸ்கின்

111. சத்திய நெஞ்சுக்குள்ள ஒரே ஓர் அசெளகரியம் யாதெனில், எளிதாய் நம்பிக்கொள்ளும் தன்மையே.

ஸ்ர் பிலிப் ளிட்னி

112.எப்பொழுதும் சமர்க்களத்தில் அல்லது செயக் கொண்டாட்டத்தில் இருப்பவன் சத்தியத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருத்தல் துர்லபம்.

கெளலி

113. நமக்கு ஆனந்தம் அளிக்கக் காரணமாய் இருப்பது எதையும் மாயை என்று கூற நியாயமே கிடையாது.

கதே

114. உண்மையே தெய்வீகம் பொருந்தியது. சுதந்திரம் இரண்டாவது ஸ்தானம் பெறும். உண்மை உணர்வதற்குச் சுதந்திரம் அவசியமானாலும் சுதந்திரத்தோடு உண்மை சேராவிடில், சுதந்திரத்தால் ஒரு பயனும் உண்டாகாது.

மார்லி

115. முரணில்லாதிருக்க முயல்க. உண்மையாயிருக்க மட்டுமே உழைத்திடுக.

ஹோம்ஸ்