பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

11



13. ஆன்மாவின் பெருந்தன்மை என்பது எத்தனை சந்தர்ப்பங்களில் நாம் இரக்கம் காட்டுகிறோம் என்ற அளவைப் பொறுத்ததே.

பேக்கன்

14. அன்பு முக்கியமாக வளர்வது ஈகையிலேயே. நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ உள்ள ஆசையே அதன் சாரம் என்பது மட்டும் நிச்சயம்.

ரஸ்கின்

15. அன்புண்டு இரக்கமில்லை என்று பாசாங்கு செய்ய முடியுமா ? அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள்.

ட்ரைடன்

16. மனித வாழ்வின் புனித பாகம் மறந்துபோன அருள் நிறைந்த சிறு செயல்களாகும்.

வோர்ட்ஸ்வொர்த்

17. ஜனங்களிடை இரக்கமும் சகோதர அனுதாபமுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயலவேண்டிய பேருணர்ச்சிகளாம்.

மார்லி

18. அடக்கமும் அன்பும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.

ஜார்ஜ் எலியட்

19. நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டும் அன்பைப் போலவே, ஓர் அழியாத உணர்ச்சியாகும்.

செஸ்டர்டன்