பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40




மணவையாரின்
இஸ்லாமிய இலக்கியப் பணி

டாக்டர். வா.சா. பானு நூர்மைதீன்
(ரீடர், சீதாலட்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி)

காலம் தந்த கருவூலம்

ஏற்றமிகு இஸ்லாம் இந்திய மண்ணிலே வேர்விட்டு விழுது பரப்பி ஆயிரமாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்று உலகில் நால்வரில் ஒருவர் இஸ்லாமியர் என்னும் விரிவுக்கும் பெருமைக்கும் சொந்தம் கொண்டாடி வருகின்றது. காந்தமென உலகோரைக் கவர்ந்துவிடும் சாந்தி மார்க்கத்தின் புகழொளியை பேரறிவைப் பரப்புதற்கெனவே விரிந்த மனப்பரப்புடைய ஆன்றோரும் சான்றோரும் இன்று வரை முயல்கின்றனர். அந்த மன்னியவொரு வரிசையில் வந்த திருக்கூட்டத்தில் மணம் வீச வந்தவரே மணவையார்.

சில ஆடவர் சேலைகட்டிக் கொண்டு பெண்பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுகின்ற இக்கால கட்டத்தில், ஓர் அசலான ஆண் எழுத்தாளர் மண்ணின் மைந்தராக, தன் ஊர்ப்பெயரைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டு இங்கே எழுதுகின்றார். சமகால எழுத்தாளர் வரிசையில் இவரொரு கோகினூர் வைரம்; இன்றைய யுகத்தின் எழுச்சிப் பிரச்சினைகளை இஸ்லாமிய இலக்கியக் கோலங்களின்