பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மீரா



தனித்துவப் போக்கு

மற்றவர்களினின்றும் மாறுபட்டு, அதே சமயத்தில் தனக்கென ஒரு தனித்துவத் தன்மையுடன் செயல்படத் துடித்தவர் மணவையார் என்பது இளமையிலேயே உறுதியாகி விட்ட ஒன்று. அதிலும் தமிழ்ப் பணியைப் பொறுத்தவரை காலத்தின் போக்குக்கும் தேவைக்கும் ஏற்ப, தன் தமிழ்ப் பணி அமையவேண்டும் என்ற வேட்கை இருந்த அளவுக்கு அப்பணி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லாதவராகவே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் காலடி எடுத்து வைத்தார்.

திருப்புமுனை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புத் தமிழ் பட்டப் படிப்பில் சேர்வதற்காக தமிழ்த் துறைத் தலைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் நேர்முகத்துக்குச் சென்றபோது நடந்த நிகழ்ச்சி மணவையாரின் தமிழ் பற்றிய சிந்தனை போக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனலாம். நேர்முகத் தேர்வுக்கு வந்த மணவை முஸ்தபாவை நோக்கி "நல்ல வருமானமும் மதிப்பான பதவிகளும் பெறத்தக்க மருத்துவ, பொறியியல் படிப்புப் படிக்க போதிய மதிப்பெண் பெற்றிருந்தும் சாதாரணத் தமிழாசிரியர் வேலைக்கு மட்டுமே பயன்படக் கூடிய தமிழ்ப் படிப்பை ஏன் தேர்ந்தெடுக்கத் துணிந்தே? தமிழ் படிச்சு நீ என்ன பெரிய சாதனையைச் செஞ்சிடப்போறே? அதிகமாப் போனால் கல்லூரிப் பேராசிரியராக உயரலாம். அதற்கு மேலே இப்படிப்பில் வேறென்ன இருக்கு?"

தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்துகொண்டு, தமிழ்ப் படிக்க ஆர்வத்தோடு வரும் மாணவனின் ஆர்வத்தைச் சிதைக்கும்படியான கேள்வி கேட்டு நிலைகுலையச் செய்-