பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா சா பானு நூர்மைதீன்

87


களில் தலை நிமிர்ந்து நடக்க வைக்கும் படைப்பு. அமெரிக்க நாட்டு மைக்கேல் ஹெச். ஹொர்ட் என்பவர், உலகச் சாதனையாளர்கள், சட்ட மேதைகள், சீர்திருத்தவாதிகள், சட்ட நிர்மாணிப்பாளர்கள், மறுமலர்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் எவரெனத் திரட்ட முற்பட்டார். 2000 பேர்; அதன்பின் அத்தொகையைச் சுருக்கி 1000 பேர், 500 பேர், 200 பேர் என்ற அளவில் திரட்டி இறுதியில் நிறைவாக 100 பேரை உருக்காட்டியபோது அவ்வரிசையில் முதலாமவராக இடம் பெற்ற பெருந்தகையாளரே பெருமானார் (சல்) அவர்கள் என்பதை விளக்கி, பிற செய்திகளையும் மணியெனத் திரட்டப்பட்டத் தெள்ளிய நூல். இந்த அரிய ஆராய்ச்சி ஆங்கிலத்தில் வெளியீடாய் மலர, அதனைத் தமிழில் மொழி பெயர்த்து, நல்ல பலகணியாக பல செய்திகளைப் பலருக்கும் காட்சியாய்க் கொடுத்தவர் மணவையார். சமுதாயத்திற்கே நன்மாராயம் மொழிந்த நேரிய நபி (சல்) அவர்களின் நற்செய்தியைப் பிறர்க்குக்குணர்த்த தாமும் நன்மை எய்தியவர். மற்றவர்க்கு மருதாணி பூசும் கை தானே சிவப்பேறுதல் போல், மற்றவர்க்கு நன்மை செய்வாராய், தாமும் நன்மை தேடிக் கொண்ட தகைமை யாளர். இதுபற்றி மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் பற்றிய தலைப்பில் விரிவாகக் காட்டப் பெறும்.

நிறைவான வாழ்த்துரை

"கருதுவார்க்கில்லை கலக்கம், தமிழ்ப்பால் பருகுவார்க்கில்லை பழுது" என்று புதிய மாணிக்கக் குறள் படைத்த வ.சுப.மா. அவர்களின் நல்லுரைபோல், செய்யும் தமிழ்த் தொண்டால் சீரிளமைத் திறம் பொலியத் தோன்ற வரும் தோற்றமுடைய மணவையார் உள்ளமும் பழுதிலாத் தூய உள்ளமாகி, ஓசையெழும்பாமலே தன்னடக்கத்துடன் ஆரவாரமிலாது தளராத் தமிழ்ப் பணிதோய்ந்து செயலாற்ற