பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் பூவணணன்

95


நான்கு நூல்களுக்கும் ஆசிரியர், சிறிய முன்னுரை எழுதி இணைத்துள்ளார்.

'விழா தந்த விழிப்பு' என்னும் நூலின் முன்னுரையில் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

"சிறுவர்க்கான சிறந்த நூல்கள்" தமிழில் பெருமளவில் வெளிவராதது பெருங்குறையாகவே உள்ளது. மேனாடுகளில் சிறுவர் நூல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் அங்கெல்லாம் வளர்ச்சி விகிதமும் அதிகமாகவே இருக்கிறது.

"இன்றைய சிறுவர்களே நாளைய பெரியவர்கள். நாட்டின் நாளைய வளர்ச்சியும் வலிமையும் அவர்களைப் பொருத்தே அமைய முடியும். எனவே, இன்றையச் சிறுவர்களின் சிந்தனைக்கு உரமூட்டும் சிறந்த நூல்கள் பெருமளவில் வெளிவர வேண்டும். அந்நூல்கள் அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், மன, பண்பாட்டு வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைய வேண்டுவது அவசியம்".

இந்த முன்னுரை சிறுவர் நூல்களின் சிறப்பையும், தேவையையும் தெரிவிக்கிறது. 'சிறுவர் நூல் தேவை' என்று உபதேசம் செய்து நிறுத்திவிடவில்லை மணவையார். தேவையை உணர்ந்து சிறுவர் நூல் எழுதிச் சேவை செய்திருக்கிறார். அத்துடன் நின்றுவிடாமல், தம் நூல்களை வெளியிடப் பிற பதிப்பகத்தார் முன்வரும் வரை காத்திராமல் தாமே பொருள் செலவு செய்து தாமே அவற்றை வெளியிட்டிருக்கும் துணிவையும் பெற்றிருக்கிறார். இரண்டுமே போற்றத்தக்க செயல்கள்.

"விழா தந்த விழிப்பு" நாவலின் கதையைச் சுருக்கமாக அறிவோம்

சிங்காரம் என்னும் மாணவன், ஒரு மாணவனுக்குத் தேவையான நல்ல குணங்கள் எதுவுமே இல்லாதவன். அவ-