பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டா் வா சா பானு நூா்மைதீன்

59


பெறவே இஸ்லாம் புறப்பட்டதென்பதை அறிந்தோம் என்ற கருத்து உருவாகும் அளவு மடலில் எழுதப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் மனித இதயங்கள் இணக்கம் பெறாக் குறையைத் திருமறை தீர்க்கும் என்ற நம்பிக்கையோடு மணவையார் இந்நூலை எழுதியுள்ளார் என்கிறார். கட்டாயக் கலிமா, விடாப்பிடி தொழுகை, நிச்சய நோன்பு, சத்திய ஜகாத், சாசுவத ஹஜ் எனும் ஐந்து கடமைகளின் வழிப்பட்ட இஸ்லாமியரின் வாழ்வுக்கும், வழிபாட்டுக் காலம், விழாத் தொடர்பான காரணங்களுக்கும் அமைந்த சூழலைப் படிப்படியாய் உணர்த்துகின்றார் ஆசிரியர் தருமிகள் இருக்க வேண்டிய உலகிலே கருமிகளும் உள்ளனர். அவர் கருமிகள் அல்லர்; சமுதாயத்தின் நோய்க் கிருமிகள் என்ற உண்மையை விளக்கி, நிதி மிகுந்தவர் ஒன்றுமிலார்க்கு ஒதுக்கின் கொடுக்கவும், ஏற்றத் தாழ்விலாச் சமுதாயம் மலரவும் அமைந்த பெருநாட்களின் மகத்துவங்களை விரித்துரைக்கின்றார். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடையை நீங்கிப் பொதுவுடைமை மனிதாபிமானத்தால் மலர்தல் வேண்டும் என்ற நோக்கும் கொடைக் கடனை - ஜக்காத்தைக் கறையாது கொடுத்து நிறைவாக வாழுங்கள் என்ற பாடமும் முழுமையான ஒவ்வொரு முஸ்லிமுக்கும் போதிக்கும் முயற்சியாகவே மலர்ந்தது இந்நூல்.

மேலும் புண்ணியம் எது? பாவம் எது? பக்தி எது? பரிசுத்தம் எது? அதைப் போதிக்க வந்த பெருமானாரின் சோதனையும், சாதனையும் எவ்வண்ணம் என்பதனை நூலாசிரியர் மணவையார் திருமறை வாக்கினை வைத்து விளக்கும் பகுதிகள் சிறப்பானவை.

காலத்தால் பழமை முதிர்ந்து செறிவு கனிந்து, ஊழுறு தீங்கனி போல் சுவையூறும் இஸ்லாத்தின் அருமை,