பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா சா பானு நூர்மைதீன்

73


கோட்பாடாக இருந்தது; இது கவர்ச்சிமிகு பரந்த நோக்காகி சாந்தி, சமாதானம் நிலவப் பெரியோர் மூலமாக வழிவந்து, இந்தியக் கலாச்சாரத்தில் வேற்றுமைக்கிடையே ஒற்றுமைப் பண்பு வளர்க்கும் மகத்தான கோட்பாட்டுக்குக் காரணமானது; இறைவன் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகக் கீழிறங்கி வெளிப்படுத்தினாலும் இறைவன் இறைவனே; அடியவன் எவ்வளவுக் கெவ்வளவு உயர்ந்தாலும் அடியவன் அடியவனே, சூஃபித்துவம்தான் 19 ஆம் நூற்றாண்டிலேயே வேறுபட்ட மத இயக்கங்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஊக்கவித்தது.

இதற்கு வலுவான சான்றே இவர்கள் கையாண்ட பொதுவான பரிபாஷை-அனைவர்க்கும் புரியும் எளிய-இனிய பொதுச் சொல் கொண்டு இறைஞானம் ஊட்டுதல் அச்சொற்களில் சில-மனோன்மணி, வெட்டவெளி, சதா சிவன், வாலை, நந்தீஸ்வரன், அம்பலம், சிவம், சக்தி, சாம்பவி, கேசரி, விட்டுணு, உருத்திரன் போன்றவை பரிபாஷைச் சொற்களே, சூஃபிகள் தனியே திரிவர்; தனித் திருப்பதே வணக்கங்களுக்குச் சிரசாக இருக்கிறது; "எழுந்திட்டா ரெல்லாரும் ஓடிப்போனார் என்ன செய்வேன்; தனித் திருந்தே ஏங்கினேனே' என்ற பாடல்கள் பிறந்த சூழல்", "நான் சாமுன் நான் சாவ நாடினேன்," "போவோம் குணங்குடிக் கெல்லோரும் - புறப்படுங்கள்" என்ற ஞான அலைகள் மோதிய காலம்-இவை படைக்கப்பட்ட இடங்கள் நூல் முழுக்கக் காட்சியளிக்கின்றன.

மேலும் நூலில் இலங்கை இஸ்லாமியத் தமிழ் சூஃபி இலக்கியங்கள் பற்றிய அரிய கட்டுரை, கோட்டாறு தந்த ஞானியர் பற்றிய செய்திகள், பட்டியல்கள்; எளிமை+ அடக்கமே = ஞானி என்பான் என்ற விளக்கம், அண்ட கோடிகளிலும் இரகசியமாய் அணுவினுக்கணுவாய்