பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் வா.சா. பானு நூா்மைதீன்


விடையிறுக்கின்றான் அப்பாஸ்.

"சொல்லுகின்ற வருஷமொன்றே அதைச்
சூழ்ந்த கொப்பு பன்னிருமாதம்
கொல்லுமிலை முப்பதுநாள் அதைச்
சூழ்ந்த கறுப்போடு வெள்ளை
நல்லிரவு பகலுமது நீதான்
நாடிச் சொன்ன பூவைந்து கேள்
வல்லவனை வணங்குவதற்கு வகுத்
தானவை ஐந்தாம் என மொழிந்தான்"

மரத்தின் பயனே பூவும், அதனின்று உருவாகும் காயும் கனியும் விதையுமாகும். அதுபோல் வண்ணமலர்களாகிய தொழுகைகள் மனிதனுக்கு மிகுபயன் வினளவிக்கின்றன என்பதை நூறுமசலா ஆசிரியர் உணர்த்துவதை எடுத்தாளும் மணவையார் இது போல் பரக்கப் பல சான்றுகளைத் தந்த வண்ணம் செல்கின்றார். நூல் இறுதியில் இந்த எட்டுவகைப் பட்ட இலக்கியங்களின் நூலாசிரியர் பெயரோடு இணைந்த நூற்பட்டியலொன்றையும் வெளியிட்டுள்ளார்.

சுருக்கமாக நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் கூறுவது போல், "மதத்திடம் அழுத்தமான பற்றுடையோர்தான் அம்மதம் சார்ந்த இலக்கியங்களை நுணுகி ஆராயத் தகுதி பெற முடியும்" என்ற கூற்று வழி, தகுதியும் மிகுதியும் படைக்க மணவையாரின் இஸ்லாமியப் பணி ஈடு இணையற்றதாய் எழிலுடன் மிளிர்கின்றது.

2) அண்ணலாரும் அறிவியலும் (1992)

இந்நூல் பிறக்க ஆசிரியரின் மனப்போராட்டமும், உந்துதலும், பிறர்க்குத் தாக்கம் ஏற்படுத்தும் தாகமும் காரணங்களாய் அமைகின்றன. இந்நூல் பிறக்கும் சூழல் அமெ