பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



148

தமிழில் அறிவியல் இலக்கியமும் மணவையார் சிந்தனையும்



(7) சுருக்க மொழிபெய்ர்ப்பு (Abridged Translation)

மூல நூலின் கருவை மாற்றாமல் உருவில் மட்டும் மாற்றம் செய்து. சுருங்கிய வடிவில் மூலத்தைத் தருதலே சுருக்க மொழிபெயர்ப்பாகும். மூல ஆசிரியன் எழுதிய சில பகுதிகளை நீக்கிவிடுவது அல்லது சுருக்கி விடுவது இம்முறையில் இயல்பானதாகும். பாலுள் கலந்திருக்கும் நீரை நீக்கி பாலை மட்டும் பருகும் அன்னப்பறவையின் தன்மையைக் கொண்டதே சுருக்க மொழிபெயர்ப்புகள்.

(8) தழுவல் மொழிபெய்ர்ப்பு (Adopted Translation)

மொழிபெயர்ப்பு என்ற பெயரால் அழைக்கப்படாமலே இவ்வகை மொழிபெயர்ப்புகள் உலக மொழிகளில் ஏராளமாக வலம்வந்து கொண்டிருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்கள், கம்பராமாயணம் போன்ற உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களில் பெரும்பாலானவை தழுவல் வகையைச் சேர்ந்தவையே,

தழுவல் மொழிபெயர்ப்பில் மூலத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் ஆங்காங்கே சுருக்கியும், விரித்தும் பெயர்க்கப்படும் மொழியின் மரபு, பண்பாடு, சிறப்புத் தன்மைக்கேற்ப சொல்லுகின்ற முறை அமையும். சான்றாக, வால்மீகி இராமாயணத்தில் இராவணன் சீதையைத் தன் தொடை மீது தூக்கி வைத்துக்கொண்டு சென்றான் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழில் இதைத் தழுவிய கம்பர் இராவணன் சீதையைப் பர்ண சாலையோடு பெயர்த்துத் தூக்கிச் சென்றான் எனக் கூறுகின்றார்.

(9) திரைப்பட சாரப் பெயர்ப்பு(Subtitle Translation)

திரையரங்குகளில் வேற்று மொழித் திரைப்படம் ஓடும்போது அதன் கதை, உரையாடல்களின் சாரத்தை